Sunday, February 7, 2021

2021 மாபெரும் கைப்பந்து போட்டி | நெய்வேலி வடபாதி

 2021 ஆம் ஆண்டிற்கான மாபெரும் கைப்பந்துப் போட்டி , தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வேலி வடபாதி பள்ளதான்மனை கிராமத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் ஆரம்பமாக உள்ளது, 

கடந்த மூன்று  வருடங்களாக தம்பி சோ பாஸ்கர் நினைவாக இதனை எங்கள் கிராமத்தின் சார்பாக நடத்திக்கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களையும், எங்கள் கைப்பந்து போட்டிக்கு வருகை தரும் அனைத்து மாவட்ட விளையாட்டு வீரர்களையும் விழாக்குழுவின் சார்பாக வருக வருக அன்போடு அழைக்கின்றோம்.


இவண்

விழாக்குழு

நெய்வேலி வடபாதி

பள்ளதான்மனை கிராமம்.











இன்னும் பல பல பரிசுகள் !!! 
வாருங்கள் வெல்லுங்கள் 

தொகுப்பு 
பாபு நடேசன்

Friday, March 22, 2019

அரசுப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் | நெய்வேலி வடபாதி

நெய்வேலி வடபாதி  : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி வடபாதி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி மூலம் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது.



நெய்வேலி வடபாதி அரசு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120க்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க முன்னாள் பள்ளி மாணவர்கள்  முயற்சி செய்தது, திருச்சி சோசியல் குவார்டு
 குழுவினரினம் (TSS - Trichy Social Squad ) பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு எடுத்துரைக்கப்பட்டது.




இதனை பாபு நடேசன் அவர்கள் முன்னிலையில் புதுவருட நிகழ்வில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து TSS  குழுவினரின் உதவியுடன் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பள்ளியில் சென்ற மாதம் பொருத்தப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் குடிநீர் முறையாக கிடைக்க, மாணவர்கள் போராடி வரும் நிலையில், அரசுப்பள்ளி ஒன்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருவது பாராட்டத்தக்கது என பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆக்கமும் தொகுப்பும்
பாபு நடேசன்
9739683023

Thursday, March 14, 2019

கல்விச் சீர் திருவிழா 2019 | நெய்வேலி வடபாதி | அரசு நடுநிலைப்பள்ளி

​தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச் சீர் பெருவிழா மார்ச் 7 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது, பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கல்விச்சீர் பொருள்களை வழங்கினார்கள். 



நெய்வேலி வடபாதி பள்ளத்தான்மனை, நரிப்பத்தை, நாச்சியான் தெரு, கட்டுவான்பிறை சுற்று வட்டார பகுதிகள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை போதிக்கும் அரும்பணியை கடந்த 50 ஆண்டுகளுக்கு செய்துவருகிறது, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு சாதாரண ஓட்டுக்கூரை கட்டிடத்தில் செயல்பட்டுவந்த இப்பள்ளி, இப்போது கப்பீரமாக காங்கிரீட் கட்டிடங்களில் செயல்படுகிறது. 


பல அரசுப்பள்ளிகளில் காணப்படும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இங்கு இல்லை. ஆனாலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள் போன்ற சிறப்பான முறையில் பள்ளி நடைபெற்று வருகிறது.​​





இங்கு பயின்ற மாணவர்கள்,  இன்று சிறந்த மிக பெரிய வல்லுநர்களாக வளர்ந்து பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக, பள்ளி தலைமை ஆசிரியராக, தமிழாசிரியர்களாக, கணிப்பொறி வல்லுனராக, பொறியியலராக, தொழில் அதிபராக, பஞ்சாயத்து துணை தலைவராக, அரசு பேருந்து ஓட்டுநராக, மருத்துவ செவிலியர்களாக, மெக்கானிக், மற்றும் மின்வல்லுநர்களாக பணியாற்றுகிறார்கள்.


அரசு அளிக்கும் அனைத்து இலவச கல்வி உபகரணங்களுடன், திறம்பட கல்வியை போதிப்பது மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கு இணையான அனைத்து செயல்பாடுகளையும் இப்பள்ளி கொண்டிருக்கிறது. 5 மடிக்கணினிகள்  மற்றும் 3 மேசை கணினிகள் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதுடன், செஸ் போன்ற விளையாட்டுகளுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் கற்று தருக்கிறார்கள்.


கல்வி சீர் திருவிழா:


இந்த விழாவில், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதவும் வகையில், பெற்றோர்கள் இணைந்து நோட்டுப் புத்தகங்கள், குடிநீருக்காக மண்குடம், குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், தரை விரிப்புகள், பாய்கள், கால் மிதிகள், விளையாட்டு சாதனங்கள், நாற்காலிகள், பீரோ, என, ஏராளமான பொருள்களை மேள தாளத்துடன் கொண்டு வந்து சீர்வரிசையாக அளித்தனர். 













பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஊர்வலம் நடத்தி, பட்டாடை உடுத்தி மேள தாளங்களுடன் கல்யாண வீட்டு விசேஷம் போல பெற்றோர்கள் நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. கொண்டு வந்த சீர் வரிசையை பள்ளி தலைமை ஆசிரியாரிடம் வழங்கினர். அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கையை கூட்டுவதாக இது அமைந்துள்ளது. 






வரவேற்பு:

இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார். மற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.பாண்டியன், துணை தலைவர் ரெ. நடேசன் மற்றும் ஊர் பொது மக்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியயோர் முன்னிலையில் கல்விசீர் விழா சிறப்பாக நடந்தது. 



தலைமையாசிரியருக்கு (ஆசிரியர் திரு பாஸ்கரன்) பக்கபலமாக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் ஆசிரியை திருமதி புவனேஸ்வரி | திரு விஜயகுமார் | ஆசிரியை திருமதி ஷீலா | ஆசிரியர் திரு வெங்கடேசன் | ஆசிரியர் திரு ராஜேஷ் | ஆசிரியை திருமதி தேவிப்பிரியா இவர்களோடு எங்கள் குழ்நதைகளுக்கு சத்தாண உணவை தினமும் வழங்க தன் சொந்த வயலில் இயற்கை முறையில் பயிடப்பட்ட காய்கறிககளை கொண்டு சத்துணவு  வழங்கும் சத்துணவு அமைப்பாளர் திரு மணிராசு அவர்களும் இக்கல்வி சீர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


எங்கள் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மேன்மை படுத்தும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 

ஆக்கமும் தொகுப்பும் 
பாபு நடேசன் 
பள்ளி முன்னாள் மாணவர்
பெங்களூரு | திருச்சி | நெய்வேலி வடபாதி 
9739683023

Thursday, August 20, 2009

நெய்வேலி வடக்கு - பாபு நடேசன்

நெய்வேலி வடக்கு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஒன்றியத்தில் நெய்வேலி வடக்கு அமைந்துள்ளது. நெய்வேலியில் இரண்டு பகுதி உள்ளது

1. நெய்வேலி வடக்கு
2. நெய்வேலி தெற்கு

நெய்வேலி - பெயர் கரணம் இதுவரை எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் யாரிடம் கேட்டலும் தெரியாது என்பது தான் பதில்.

எனது ஊரின் சிறப்பு:
முப்புரங்களிலும் குளங்களாலும் ஒருபுறம் ஆற்றங்கரையாலும் பச்சை நிறம் சூழ பரந்த நிலப்பரப்பில் இருக்கிறது

எங்கள் ஊரில் தெற்கே அய்யனார் காவலில் உள்ளார். மக்களிடம் எந்த தீய சக்தியையும் நெருங்கவிடாமல் தெற்கில் இருந்து நாலாபுறமும் காவல் இருக்கிறார். ஊரின் மேற்கே ஊரின் மேற்க்கோடியில் பெரிய அய்யனார் கோவில் அமைந்து மக்களுக்கு பக்கபலமாக உள்ளார்.

அதன் அருகில் கறுப்பர் கோவில் உள்ளது. நான்கு புறங்களிலும் பனை மரநிழலில் குதிரைகாவளுடன் மக்களை காத்து அருள் புரிகிறார்....!

ஊரின் வடபகுதிக்கு முன்னால் தோட்டத்து முனி காவல் தருகிறார்....! ஊரின் மேற்கு கோடியில் மருதப்ப கோவில் உள்ளது இது மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று. இன்னும் நிறைய கோவில்கள் இருக்கிறது

ஆனால் அதனை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாததனால் தெரிந்த பிறகு சொல்கிறேன்

எங்கள் ஊரில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்
இங்கு நெல், சோளம் கரும்பு, உளுந்து, கேழ்வரகு, கடலை, தென்னை, தைலமரம் (eucalyptus} எள், சவுக்கு, இப்போது மருந்துக்கு பயன்படும் வெள்ளரி அதிகமாக பயிரிடுகிறார்கள், வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊரில் விவசாயம் சிறப்பாக செய்து வருகிறார்கள்

இங்கு சில ஜாதி வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறி கிடையாது,

ஒரு மேல்நிலை பள்ளியும் மூன்றுக்கு மேற்ப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளும், ஐந்துக்கு மேற்ப்பட்ட நடுநிலைப்பள்ளிகளும், 15 மேற்ப்பட்ட தொடக்கப்பள்ளிகளும் உள்ளன

தொடக்கப்பள்ளிகளில் மிகக்குறைந்த மாணவ மாணவிகளே பயின்று வருகிறார்கள், காரணம் ஆங்கில பள்ளிகளின் வருகை அதிகரிப்பாலும், பெறோர்களின் ஆங்கில மோகத்தினாலும். மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் கடின உழைப்பால் மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட அதிகமாக மதிப்பெண் பெறுகிறார்கள்.

மக்களிடம் இன்னும் ஜாதி என்னும் அகம் இன்னும் என் ஊரில் காணப்படுகிறது. நிறைய பேர் இன்னும் படித்த முட்டாள்களாகவே இருக்கிறார்கள்
என்னதான் இளநிலை, முதுநிலை பட்டங்கள் பெற்றாலும் ஜாதி வெறியை விட்டு வெளிவரவில்லை ( படிக்காதவர்களைவிட படித்தவர்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என்றே கூறலாம்.) என்று தான் சொல்வேன்.

இருப்பினும் மாறும் எனும் மனம் எனக்குள் இருக்கிறது ( சொல்லப்போனால் இப்போது நிலைமை நன்றாக இருக்கிறது, அதிகம் படித்தவர்கள் இருப்பதினால் ).

இந்த அவசர உலகில் மக்கள் பாசத்துடனும் அமைதியுடனும் வாழ்ந்துவருகிறார்கள்.
பாசப்பிணைப்பில் பயிரிடப்பட்ட மக்களால் எந்தவித அச்சுறுத்தல்களும் இந்நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் வராது என் உறுதிகூறுகிறேன்.

அரசியலில் ஆனந்தப்படும் அரசியல்வாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஊர் என்றே சொல்லலாம். பெண்களை குறைவாக படிக்க வைக்கும் பழக்கம் உள்ளவர்கள். பெண் படித்து என்ன செய்யப்போகிறாள் என்ற எண்ணம்.

நூறில் பத்து சதவிகிதம் பேர் தான் பெண்களை கல்லூரிவரை அனுப்புகிறார்கள்.
அவர்களை காணும்போதெல்லாம் பாராட்டுவேன், படிக்கவையுங்கள் என்று மன்றாடுவேன். ஒரு பெண் படித்துவிட்டால் அந்த குடும்பமே படித்தது மாதிரி என்று எடுத்து இயம்பி இருக்கிறேன் .

சரியான வழிகாட்டுதலுக்கு யாரும் வராதது தான் பெண்களின் கல்விதரம் குறைய காரணம் என சொல்வேன்


இரண்டு மருத்துவமனைகள் உள்ளது. இதில் தற்ப்போது 24 மணிநேரமும் மகப்பேறுக்கு தனி மருத்துவமனையாக ஒன்று செயல்பட்டு வருகிறது.

இன்னும் நிறைய நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது

இன்னும் நிறைய எழுதுவேன்..................!

தவறுகள் எதாவது இருந்தால் சுட்டிக்காட்டுங்க மேலும் சிறப்பாக செய்ய துனைபுரியுங்கள்....

நன்றி.....

என்னிடம் ஒரு சில புகைபடம் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

வாழ்த்துகளுடன்
உங்கள் அன்பு மறவா
பாபு நடேசன்
நெய்வேலி வடக்கு - பள்ளத்தான்மனை